குன்னம், ஜன.24: வேப்பூர் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மாணவிகள் வாக்காளர் விழிப்புணவுர்வு பேரணி நடைபெற்றது. குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கான விழிப்புணவு பேரணியில் வேப்பூர் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் தேர்தல் விழிப்புணர்வு ஒன்றை விரல்மையால் உன் உரிமையை மீட்டெடு, விரல் நுனியில் தேசத்தின் தீர்ப்பை மாற்றுவோம்.
மனதில் உறுதி வேண்டும் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கொண்டு கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணி வேப்பூர் பேருந்து நிலையம் சென்று மீண்டும் கல்லூரிக்கு நிறவடைந்தது.
இந்நிகழ்ச்சிக்கு குன்னம் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார். குன்னம் வட்டாட்சியர் சின்னதுரை, கல்லூரி (பொறுப்பு) முதல்வர் சாஸ்திரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் துணை வட்டாட்சியர் தங்கராஜ், கிராம நிர்வாக அலுவலர் மகேந்திரன்,கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
