தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் டிரைவரின் கைவிரலில் சிக்கிய மோதிரம் அகற்றம்

திருவெறும்பூர், ஜன.26: திருச்சி திருவெறும்பூர் தீயணைப்பு துறையினர், டிரைவரின் கைவிரலில் சிக்கிய மோதிரத்தை பத்திரமாக வெட்டி அகற்றனர். திருச்சி அருகே உள்ள வயலூர் சாலை நாச்சிகுறிச்சி ஜோதி நகரை சேர்ந்தவர் டிரைவர் யோவான். அவரது கையில் போட்டிருந்த மோதிரத்தை கழட்ட முடியாமல் விரல் வீங்கியது.

இதனால் வலியால் அவதிப்பட்டு வந்தார். அதன்பிறகு திருவெறும்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு சென்றார். அப்போது தீயணைப்பு வீரர்கள் திராவிடன், ஆரோக்கியராஜ், வெங்கடேசன் ஆகியோர் யோவான் விரலுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படாமல் மோதிரத்தை துண்டித்து எடுத்தனர். இதனால் டிரைவர் யோவான் நிம்மதியடைந்தார்.

 

Related Stories: