கெரோனா தடுப்பு விதிமுறை குறித்து கக்குச்சி பள்ளியில் கலெக்டர் ஆய்வு

ஊட்டி, ஜன. 30:  கொரோனோ தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என கக்குச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கலெக்டர் இ்ன்னசென்ட் திவ்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார். கொரோனா பாதிப்பு உள்ள நிலையில், பொது தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வரவழைக்கப்பட்டு பாடங்கள் கற்றுத்தரப்படுகின்றன. கடந்த வாரம் முதல் வகுப்புகள் துவங்கி நடந்து வருகிறது. மாணவர்களின் நலன் கருதி சமூக இடைவெளி மற்றும் இதர பாதுகாப்பு நடவடிக்கைகளை பள்ளிகள் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியிருந்தது.அனைத்து பள்ளிகளும் இதனை முறையாக பின்பற்றி வருகிறார்களா என அவ்வப்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில், நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று ஊட்டி அருகேயுள்ள கக்குச்சி பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது, மாணவர்கள் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டுள்ளார்களா மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மாணவர்களிடம் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் அக்கறை செலுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கெட்சி லீமா அமாலினி, வட்டார வளர்ச்சி அலுவலர் தர் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: