சத்தி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1540க்கு விற்பனை ஒரே நாளில் ரூ.540 உயர்வு

சத்தியமங்கலம், ஜூன் 16: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் மல்லி, முல்லை, சம்பங்கி, செண்டு மல்லி உள்ளிட்ட பல்வேறு விதமான மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு, விளையும் பூக்கள் சத்தியமங்கலத்தில் விவசாயிகளால் நடத்தப்படும் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தமிழகத்தின், பல்வேறு நகரங்களுக்கும் மற்றும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், ஆனி மாத முகூர்த்த சீசனை முன்னிட்டு மல்லிகை பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

இதன்காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பூக்களை அனுப்புவதற்காக மல்லிகை பூக்களை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். இதனால், சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.1000க்கு விற்பனையானது. இந்நிலையில், நேற்று விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.1540க்கு விற்பனையானது. இதேபோல், முல்லை ரூ.300க்கும், கனகாம்பரம் ரூ.800க்கும், சம்பங்கி ரூ.40க்கும், செண்டு மல்லி ரூ.80க்கும் விற்பனையானது. ஒரே நாளில் மல்லிகை பூ விலை கிலோவுக்கு ரூ.540 விலை அதிகரித்து விற்பனையானதால் பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post சத்தி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1540க்கு விற்பனை ஒரே நாளில் ரூ.540 உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: