மொபட்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி

 

ஈரோடு, ஜூன் 15: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள வசந்தம் நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் பிரசன்னா (35). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது மொபட்டில் பெருந்துறையில் இருந்து சென்னிமலை நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பெருந்துறை அருகே காஞ்சிக்கோவில் பெத்தாம்பாளையத்தை சேர்ந்த ராசு மணி என்பவரின் மகன் கல்லூரி மாணவருமான பூபதி (23) என்பவர் அவருடைய உறவினர் வீட்டுக்கு மொபட்டில் பெருந்துறை நோக்கி சென்று கொண்டிருந்தார். ஈங்கூர் அருகே வந்தபோது 2 மொபட்களும் நேருக்கு நேர் மோதியது. இதில், பிரசன்னாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதேபோல், பூபதிக்கும் காயங்கள் ஏற்பட்டது. பின்னர், இருவரும் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில், பிரசன்னா நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மொபட்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: