நீலகிரி மாவட்டத்தில் 6 வட்டங்களில் 19 முதல் 21-ம் தேதி வரை ஜமாபந்தி: பொதுமக்கள் கோரிக்கை மனு அளிக்கலாம்

 

ஊட்டி, ஜூன் 14: நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் வரும் 19 முதல் 21ம் தேதி வரை ஜமாபந்தி நடக்கிறது. பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்து பயன் பெறலாம். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அருணா கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் பசலி 1433-க்கான வருவாய் தீர்வாயம் (ஜமா பந்தி) வரும் 19ம் தேதி துவங்கி 21ம் தேதி வரை ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய வட்டங்களில் நடக்கிறது.

இதன்படி குந்தா வட்டத்தில் 19, 20-ம் தேதிகளில் மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் நடக்கிறது. பந்தலூர் வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தலைமையில் 19, 20-ம் தேதிகளில் நடக்கிறது. 19, 20, 21 ஆகிய தேதிகளில் குன்னூர் வட்டத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலும், ஊட்டி வட்டத்தில் ஊட்டி ஆர்டிஓ மகராஜ் தலைமையிலும், கோத்தகிரி வட்டத்தில் குன்னூர் ஆர்டிஓ சதீஸ் தலைமையிலும், கூடலூர் வட்டத்தில் 19, 20-ம் தேதிகளில் கூடலூர் ஆர்டிஓ செந்தில்குமார் தலைமையிலும் வருவாய் தீர்வாயம் நடக்கிறது.

எனவே பொதுமக்கள் மேற்கண்ட 3 நாட்களில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு சென்று தங்கள் கோரிக்கைகளை வருவாய் தீர்வாய அலுவலர்களிடம் அளிக்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post நீலகிரி மாவட்டத்தில் 6 வட்டங்களில் 19 முதல் 21-ம் தேதி வரை ஜமாபந்தி: பொதுமக்கள் கோரிக்கை மனு அளிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: