காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

 

கூடலூர், ஜூன் 12: பள்ளிகளில் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதி முறைகள் குறித்து அண்மையில் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாணவர்களிடையே பாலியல் சீண்டல்கள் ஏற்படாமல் பாதுகாப்பது, போதைப் பொருட்கள் பயன் படுத்தாமல் இருப்பது, முடி அலங்காரம் செய்வது, இருசக்கர வாகனங்களை பள்ளி மாணவர்கள் இயக்குவது போன்ற விஷயங்களில் மாணவர்கள் கடை பிடிக்க வேண்டிய விதி முறைகள் குறித்து கூடலூரை அடுத்துள்ள மே பீல்டு உயர் தொடக்க பள்ளி மாணவர்களுக்கு நெலாக்கோட்டை காவல் நிலைய காவல் துறையினர் நேரடியாக பள்ளி வளாகத்தில் விழிப்புணர்வு வழங்கினர்.

இந்நிகழ்ச்சிக்கு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரஷீத் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் பால்விக்டர் முன்னிலை வைத்தார். நெலாக்கோட்டை எஸ்ஐ சிக்கந்தர் மற்றும் காவலர்கள் பிரபாகரன், ரவி, ராஜ் குமார் ஆகியோர் மாணவர்களிடம் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக, மாணவர்கள் பள்ளி நுழைவு விழா மற்றும் இயற்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஜெசிக்கா, குமார், பிரோஸ், ஸ்ரீனிவாசன், கற்பகவல்லி, பார்வதி, மாலதி, தஸ்னி, சுகைலா மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிரியாமோள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

The post காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: