துறையூர், ஜன.28: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கண்ணனூர் இமயம் கல்விக்குழுமத்தில் 77வது குடியரசு தின விழா நடைபெற்றது. கல்லூரியின் நிர்வாக செயலர் ஆண்டி தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கினார். இதனைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாக இயக்குனர் ஜனார்த்தனன். சாதனா ஜனார்த்தனன் புனிதவதி, மல்லிகா ஆண்டி, வேளாண்மை கல்லூரி முதல்வர் முனைவர் பார்த்திபன், இயற்கை மற்றும் யோகா மருத்துவம் கல்லூரி முதல்வர் முனைவர் ஹேமலதா.
கல்வியல் துறை முதல்வர் முனைவர் ஈஸ்வரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள், மேலும் இணைப்பேராசிரியர்கள், உதவிபேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு குடியரசு தின விழாவை கலந்து கொண்டனர். இவ்விழாவின் இறுதியில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.
