திருச்சி, ஜன. 23: தென்னக ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்புரயில்வே வாரியம் சார்பில் தென்னக ரயில்வே வழித்தடத்தில் ரயில் நிலையங்களில் ரயில் நிற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில் வரும் 26ம் தேதி முதல் வண்டி எண், 22675 சென்னை எழும்பூர் – திருச்சி அதிவிரைவு ரயில் இனி திருவெறும்பூரில் மதியம் 2.27 முதல் 2.28 மணி வரை 1 நிமிடம் நின்று செல்லும்.அதேபோல், 22676, திருச்சி – சென்னை எழும்பூர் அதிவிரைவு ரயில் மதியம் 12.27 முதல் 12.28 மணி வரை ஒரு நிமிடம் திருவெறும்பூரில் நிற்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
