மேல சூரியூர் ஜல்லிக்கட்டில் குளறுபடி 4 பேர் மீது போலீசார் வழக்கு

திருவெறும்பூர், ஜன. 22: திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஏற்பாடுகளை சரியாக செய்யதால் போலீசார் உட்பட பலர் காயமடைந்ததாக கூறி ஏற்பாட்டாளர்கள் மீது நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில் புதிதாக கட்டப்பட்ட ஜல்லிக்கட்டு மைதானத்தில் மாட்டுப்பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இந்த போட்டியில்கான ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு விழா குழுவினர் செய்திருந்தனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளில் பல குளறுபடிகள் இருந்ததாக கூறப்பட்டது. இதனால் மணிகண்டம் காவல் நிலைய போலீஸ் ஏட்டு கார்த்திக், திருவெறும்பூர் ஊர்க்காவல் படையை சேர்ந்த கங்காதரன், உட்பட பொதுமக்கள் பலரும் காயமடைந்தனர். ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகளை செய்த விழா கமிட்டினர் சரிவர செய்யாததால் தான் இதுபோன்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது என கூறி ஜல்லிக்கட்டு விழா கமிட்டியை சேர்ந்த சண்முகசுந்தரம், பாசமன்னன், உதயகுமார், சுந்தர் ஆகிய நான்கு பேர் மீது நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: