லால்குடி அருகே மூதாட்டி முகத்தில் மிளகாய் பொடி தாலி செயின் பறிப்பு

லால்குடி, ஜன. 23: லால்குடி அருகே மூதாட்டி முகத்தில் மிளகாய் பொடி தாலி செயின் பறித்த மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த காட்டூர் ராமநாதபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வேலு மனைவிசின்னபொன்னு (85). வயதான சின்ன பொண்ணு சற்று பார்வை குறைபாடு உள்ளவர்.

இவர் மட்டும் வீட்டில்சேரில் உட்கார்ந்து இருந்த போது, அடையாளம் தெரியாத மர்ம நபர் சின்ன பொன்னு முகத்தில் மிளகாய் பொடி தூவி, இவரது கழுத்தில் இருந்த 2 பவுன் செயினை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Related Stories: