துறையூர் அருகே விவசாயிகளை அச்சுறுத்தும் மின்கம்பம்

துறையூர், ஜன. 22: துறையூர் அருகே வயலில் சாய்ந்து நிற்கும் மின் கம்பத்தை மாற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெட்டியாப்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்திற்கு செல்லும் தார்சாலை அருகே மின் கம்பங்கள் அமைந்துள்ளன. சாலையின் இரண்டு புறங்களில் விவசாய நிலங்கள் உள்ளன.

இந்நிலையில் சாலையோரம் உள்ள ஒரு மின்கம்பம் விவசாய வயலில் கையெட்டும் அளவிற்கு சாய்ந்து நிற்கிறது. எந்த நேரத்தில் வயல்களில் சாய்ந்து விழும் நிலையில் உள்ளதால் விவசாயம் பார்க்கும் விவசாயிகள் பயத்தில் வேலை செய்து வருகின்றனர்.

இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் பலமுறை மின்வாரியத்தில் தகவல் தெரிவித்தும். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து மின் கம்பத்தை அகற்றி தரமான புதிய மின்கம்பம் அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Stories: