திருச்சி, ஜன.24:சோமரசம்பேட்டை வீரம்மாள் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி சாந்தலட்சுமி (51). இவர் தனது தாய் கமலாபாய் பென்ஷன் தொகையை வைத்து குடும்பம் நடத்தி வந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கமலாபாய் இறந்ததால் பென்ஷன் வருவது நின்றுவிட்டது. இதனால் சாந்தலட்சுமி கடன் வாங்கியதை அவரால் திரும்ப செலுத்த முடியவில்லை.
இதனால் மனவேதனையில் 3 மாதங்களுக்கு முன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றினர். பின்னர் ஜன.19ம் தேதி கழிவறையை சுத்தப்படுத்தும் ஆசிட்டை எடுத்து குடுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஜன.21ம் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
