மிரட்டி பணம் பறிக்க முயன்ற இருவர் கைது

திருச்சி,ஜன.22: அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்
திருச்சி உய்யகொண்டான் திருமலை ரத்தினம் நகரைச் சேர்ந்தவர் ரெங்கராஜ் (37). இவர் ஜன.20ம் தேதி அம்மையப்பன் நகரில் நின்று கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் வந்த 2 மர்ம நபர்கள் ரெங்கராஜிடம் அரிவாளை காட்டி மிரட்டி பணத்தை பறிக்க முயன்றனர்.

அவர் சத்தமிடவே, பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து அரசு மருத்துவமனை போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கோணவயலைச் சேர்ந்த மாரிமுத்து (23), புதுக்கோட்டை மாவட்டம் வள்ளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவா(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து டூவீலரை பறிமுதல் செய்தனர்.

 

Related Stories: