திருச்சியில் சாக்கடைக்குள் விழுந்து சடலமாக மிதந்த பெங்களூர் வாலிபர்

திருச்சி, ஜன. 23: திருச்சியில் சாக்கடைக்குள் சடலமாக கிடந்த பெங்களூர் வாலிபர் உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். பெங்களூரை சேர்ந்தவர் அம்ஜத் அலி (38). இவர் அரியமங்கலத்தில் தங்கி ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அரியமங்கலம்-அம்பிகாபுரம் சாலையில் டூவீலரில் வந்த போது, தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த சாக்கடையில் விழுந்துள்ளார்.இதில் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்துடன், தலை மட்டும் சாக்கடையில் சொருகியதில், மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பலியானார்.

மறுநாள் காலை அவ்வழியாக வந்த பொதுமக்கள் இந்த விபத்தை கண்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அம்ஜத் அலி உடலை மீட்டு பரிசோதனக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Related Stories: