மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்ட வீடியோ பதிவில் பேசியுள்ளதாவது: ஒரு நடிகர் (விஜய்) கட்சி ஆரம்பித்து மக்களை சந்தித்து ஆசை வார்த்தை கூறுகிறார். இதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை. ஆனால், அதிமுகவை கொச்சைப்படுத்தி விமர்சனம் செய்யும் நிலையில், நடிகர் கட்சியில் அடைக்கலமாகியுள்ள முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் மனசாட்சியை எங்கே கொண்டுபோய் அடமானம் வைத்துவிட்டார்கள்? எம்ஜிஆர், ஜெயலலிதாவின் சேவைகளில் பங்கெடுத்தவர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு, அதிமுகவிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து சொல்வதை இவர்கள் மனசாட்சி ஏற்றுக்கொள்கிறதா? இவ்வாறு பேசியுள்ளார்.
