மயிலாடுதுறையில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறை, ஜன.26: மயிலாடுதுறையில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தேசிய வாக்காளர் தினம் நேற்று (ஜன.25) கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறையில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்களிப்பதின் அவசியம் மற்றும் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவது நமது கடமை என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. மயிலாடுதுறை தாலுகா அலுவலகத்தில் இருந்து துவங்கிய விழிப்புணர்வு பேரணியை டிஆர்ஓ பூங்கொடி தலைமை வைத்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆர்டிஓ விஷ்ணுபிரியா, தாசில்தார் சுகுமாரன், விஜயராகவன், தருமபுரம் ஆதீனம் கல்லூரி முதல்வர் சாமிநாதன் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர். விழிப்புணர்வு பேரணி மயிலாடுதுறை பட்டமங்கலம் தெரு, மணிக்கூண்டு, பெரிய கடைத்தெரு வழியாக ராஜன்தோட்டம் விளையாட்டு மைதானத்தில் பேரணி நிறைவு பெற்றது.

 

Related Stories: