விஷம் குடித்த இளம்பெண் சாவு

களக்காடு, ஜன.26: களக்காடு அருகேயுள்ள கடம்போடுவாழ்வை சேர்ந்தவர் செல்வின் துரை. தொழிலாளி. இவரது மனைவி கஸ்தூரி (22). கடந்த 19ம்தேதி கஸ்தூரிக்கும், அவரது மாமியாருக்கும் வீட்டில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த கஸ்தூரி வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் கஸ்தூரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கல் ‘சாதி ஒழிப்பே சமூக விடுதலை’ என்ற தலைப்பில் மாநில அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே சென்னையில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் பங்கேற்ற நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளை சேர்ந்த மாணவிகளுக்கு துணைவேந்தர் சந்திரசேகர் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்.

Related Stories: