கம்பத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

கம்பம், ஜன.26: கம்பத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வீடுகளில் கருப்புகொடி கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கம்பம் நகராட்சி 23வது வார்டில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வீடுகள் அரசு புறம்போக்கு வண்டிப்பாதையை, ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

அதில், ஆக்கிரமிப்புகளை அகற்ற கம்பம் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இதையடுத்து நகராட்சி சார்பில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக அப்பகுதியில் குடியிருந்து வருபவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், சுவரொட்டி ஒட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

Related Stories: