நாகர்கோவில் – கோவை ரயில் இன்று முதல் சாத்தூரில் நிறுத்தம்

சாத்தூர், ஜன.26: நாகர்கோவில்-கோவை ரயில் இன்று முதல் சாத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்வதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தாக்கத்தின் போது நாகர்கோவில் – கோயம்புத்தூர், கோயம்புத்தூர்- நாகர்கோவில் ரயில் சாத்தூர் ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்று வந்தது. இதனால் சாத்தூரில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் பயணிகள்,வியாபாரிகள் விருதுநகர் சென்று பயணம் செய்து வந்தனர்.

ரயில் சாத்தூரில் நின்று செல்ல வேண்டும் என விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர், ரயில்வே நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார். அதைத் தொடர்ந்து இன்று முதல் சாத்தூர் ரயில் நிலையத்தில் இருமார்க்கத்திலும் ரயில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Related Stories: