குடியரசு தினத்தையொட்டி நெல்லை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

நெல்லை, ஜன. 26: குடியரசு தினத்தையொட்டி நெல்லை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் கண்ணன், ரயில்வே போலீஸ் எஸ்ஐ ஸ்டீபன் மற்றும் எஸ்ஐக்கள் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், ரயில் நிலைய ஆட்டோ ஓட்டுநர்கள், வியாபாரிகள் மற்றும் சுமை தூக்கும் ஊழியர்கள் என 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

“ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடக்கும் பைகள், பொருட்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான நபர்களை கண்டால், ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படைக்கோ அல்லது ரயில்வே போலீஸ் அதிகாரிகளுக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும்’’ என ஆட்டோ ஓட்டுநர்களுக்கும், ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. குடியரசு தினத்தை முன்னிட்டு எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் தடுக்க, ரயில்வே போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் உஷார் நிலையில் உள்ளனர்.

Related Stories: