அச்சுறுத்தும் பனிப்புயல்; அமெரிக்காவில் 13,000 விமானங்கள் ரத்து: 20 கோடி மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

ஒக்லஹோமா: அமெரிக்காவின் ஈஸ்ட் டெக்சாஸ்சில் தொடங்கி நார்த் கரோலினா வரை கடும் பனிப்புயல் வீசக்கூடும். இதனால் அதிகளவு பாதிப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் டெக்சாஸ் மாகாணத்தில் பல பகுதிகளில் ஏற்கனவே உறைபனி பெய்து வருகிறது. பனிக்கட்டிகள் உடைந்து விழுந்ததால் மரங்கள் முறிந்து கிடக்கின்றன. பல மாகாணங்களில் தொடர் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 20 கோடி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. பனிப்புயல் காரணமாக அமெரிக்கா முழுவதும் 13 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Related Stories: