கூட்டணி குறித்து தெளிவான முடிவெடுப்போம்: தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா பேட்டி

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இன்று காலை தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அளித்த பேட்டி:
தனது கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வந்து சென்றுள்ளார். இதில் நான் கருத்து சொல்ல எதுவுமில்லை. தேர்தல் கூட்டணி குறித்து எங்கள் கட்சி நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டு, உரிய நேரத்தில் கூட்டணி அறிவிப்பை வெளியிடுவோம். நான் ஏற்கனவே 3 கட்டங்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளேன். இப்போது தூத்துக்குடியில் இருந்து வரும் பிப்ரவரி 3ம் தேதி முதல் கன்னியாகுமரி, விருதுநகர் உள்பட பல்வேறு இடங்களுக்கு 4வது கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறேன்.

யார், யாருக்கு எத்தனை தொகுதி என்று இதுவரை எந்த கட்சியும் அறிவிக்கவில்லை. பிப்ரவரி 20ம் தேதிக்குப் பிறகுதான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அதனால் எங்களுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. தேமுதிக குழந்தைகளுக்கு எப்போது திருமணம் செய்ய வேண்டும், எந்த இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று ஒரு தாயாக எனக்குத் தெரியும்.

தேமுதிகவை பொறுத்தவரை, எனக்கும் கடமைகள், பொறுப்புகள் அதிகமாக உள்ளன. எனவே, உரிய நேரத்தில், அனைவரும் போற்றும் வகையில் ஒரு நல்ல கூட்டணி அமைப்போம். எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதே நேரத்தில், தேமுதிகவை பொறுத்தவரை, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கும் விதத்தில், நாங்கள் ஆழமாகச் சிந்தித்து, தெளிவாக முடிவெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: