எங்கள் சாதனைகளை நாங்களே மிஞ்சும் அளவுக்கு திராவிட மாடல் 2.0 ஆட்சி இருக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

சென்னை : ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார். அதில், “அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளும் பின்னடைவை சந்தித்து மோசமான நிலையை அடைந்திருந்தது. இடியாப்ப சிக்கல் என்ற சூழலில்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். எங்கள் சாதனைகளை நாங்களே மிஞ்சும் அளவுக்கு திராவிட மாடல் 2.0 ஆட்சி இருக்கும். மக்களுக்காக வாழ்ந்தேன், தமிழ்நாட்டை வளர்த்தெடுத்தேன் என்பது புகழ்ச்சி அல்ல, உண்மை. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3,500 கோடியில் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.2,000லிருந்து ரூ.3,400ஆக உயர்ந்துள்ளது. பகுதி நேர ஆசிரியர்களின் பணிக்காலத்தை அடிப்படையாக கொண்டு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: