ராமநாதபுரம்: அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு நடத்தி வரும் ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில், அவரது ஆதரவாளரான ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் தர்மர் எம்பியின் பதவிக்காலம் 2028 வரை இருப்பதால் அதிமுகவிலேயே தொடர்ந்து பயணிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமியை இன்று மாலை சந்தித்து அதிமுகவில் இணைய உள்ளார். மேலும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ஆவின் இயக்குனராக இருந்த ஓபிஎஸ் ஆதரவாளர் அசோகன் உள்ளிட்ட நிர்வாகிகளும் அதிமுகவில் ஐக்கியமாக உள்ளதாக கூறப்படுகிறது. அரசியல் எதிர்காலம் மற்றும் கூட்டணி குறித்து முடிவு எடுக்காமல் ஓபிஎஸ் திணறி வருவதால், அவரது ஆதரவாளர்கள் கூண்டோடு வெளியேறுவதால் கூடாரம் காலியாகி வருகிறது.
* எங்கப்பா தூக்கு கயிறு?
எடப்பாடி: டிடிவி ஒரு துரோகி.. அவர் ஒரு 420.
டிடிவி: எடப்பாடி ஒரு துரோகி. இதற்கு நோபல் பரிசே எடப்பாடிக்கு கொடுக்கலாம். எடப்பாடி கூட சேரவே மாட்டேன். அவர் கூட கூட்டணி வெக்குறதுக்கு தூக்கு மாட்டி தொங்கலாம். இப்படி, மாத்தி மாத்தி திட்டி கிட்ட ரெண்டு பேரும்… நேற்று மதுராந்தகத்தில் நடந்த கூட்டத்தில் நேருக்கு நேர் சந்தித்து சிரித்து பேசி கொண்டனர். பின்னர், எடப்பாடி அவர சகோதரர் என்றும், டிடிவி அவர அண்ணன் என்றும் கொஞ்சி குழாவினாங்க.. தொடர்ந்து, இருவரும் கூட்டாக பேட்டி அளித்தபோது, ‘நாங்கள் ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள்’ என்றனர். இதை பார்த்த நெட்டிசனகள், ‘‘என்ன கயிறு ரெடி பண்ணலாமா’’ என கமென்ட் அடித்து வருகின்றனர்.
* சிபிஐ வழக்கு க்ளோஸ்
ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி மருத்துவக் கல்லூரிகள் தொடங்க முறைகேடாக அனுமதி வழங்கியதில் பெரும் ஊழல் செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து உள்ளது. இதில் இருந்து தப்பிக்கவே பாஜவுடன் அன்புமணி கூட்டணி வைத்து வருகிறார். தற்போது, தந்தை ராமதாசுடன் ஏற்பட்ட சொத்து பிரச்னையால் அவரிடம் இருந்ததை ஆட்டைய போட்டு கட்சியை இரண்டாக உடைத்து பாஜவிடம் மீண்டும் சரணடைந்து உள்ளார். ஆனால், நேற்று மதுராந்தகத்தில் நடந்த கூட்டத்தில், ஊழலை பற்றி இவர் பேசுகிறார். இதற்கு நெட்டின்சன்கள் அடித்துள்ள கமென்ட். ‘‘இனிமே ஒரே ஜாலி. சிபிஐ வழக்கு க்ளோஸ் ஆகிடும். பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு போல் அன்புமணியும் இனிமே சவுக்கியமா சுத்துவாரு…’’
