ஓபிஎஸ் ஆதரவு எம்பி தர்மர் அதிமுகவில் சேருகிறார்

சென்னை: ஓபிஎஸ் ஆதரவு ராஜ்யசபா எம்பி தர்மர் அதிமுகவில் இன்று சேருகிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பல குழுக்களாக பிரிந்து நிற்கிறது. அதில் அதிமுக கூட்டணியில் அமமுக நேற்று முன்தினம் இணைந்தது. நேற்று எடப்பாடியுடன் இணைந்து டிடிவி தினகரன் பேட்டியளித்தார். தற்போது டிடிவியுடன் பயணம் செய்த, ஓ.பன்னீர்செல்வம் தனித்து விடப்பட்டு விட்டார். இவருடன் பயணம் செய்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், சுப்புரத்தினம் ஆகியோர் திமுகவில் இணைந்து விட்டனர்.

தற்போது ஓ.பன்னீர்செல்வத்துடன் ராஜ்யசபா எம்பி, எம்எல்ஏ ஐயப்பன் மட்டுமே உள்ளனர். இந்தநிலையில், ராஜ்யசபா எம்பி தர்மர், பன்னீர்செல்வத்திடம் இருந்து பிரிந்து எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் சேருகிறார். இவருக்கு ராஜ்யசபா சீட் வாங்குவதில்தான் எடப்பாடி பழனிச்சாமியுடன் மோதல் ஏற்பட்டு, அதிமுகவை ஓ.பன்னீர்செல்வம் உடைத்தார். தற்போது தர்மர் அதிமுகவில் இன்று சேருகிறார். இதனால் தற்போது பன்னீர்செல்வம் தனிமரமாகி வருகிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

Related Stories: