குறை தீர்க்கும் முகாமில் 83 மனுக்கள் மீது தீர்வு

தர்மபுரி, ஜன. 24: தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில், 83 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில், மக்கள் குறைதீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) மாவட்ட எஸ்பி அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. பிரமாண்ட பந்தல் மற்றும் இருக்கைகள் அமைத்து 32 போலீஸ் ஸ்டேஷன் சார்பில், தனித்தனியாக புகார் மனுதார்களை நேரில் வரவழைத்து குறைகள் கேட்டு மனுக்கள் மீது விசாரிக்கப்பட்டது. மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று விசாரித்தார். முகாமில் ஏடிஎஸ்பி ஸ்ரீதரன், பொதுமக்கள், போலீசார் கலந்து கொண்டனர். இதில், பெறப்பட்ட 83 மனுக்கள் மீதும், உடனடியாக விசாரித்து தீர்வு காணப்பட்டது. மேலும், புதியதாக 34 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: