சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது. இது குறித்து மநீம வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘சட்டசபை தேர்தலுக்காக நமது கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு கூட்டம் நாளை (ஜன.24) தலைமை நிலைய அலுவலகத்தில் நடைபெறும். இதில் நிர்வாகிகள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மநீம, சட்டசபை தேர்தல் பிரசாரம், ஆயத்த பணிகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
