மகாத்மா காந்தி பெயரிலேயே ஊரக வேலைத் திட்டம் தொடர வேண்டும் :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்

சென்னை :100 நாள் வேலைத் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். அதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “நம் மாநிலத்தின் மீது ஏன் இந்த ஓரவஞ்சனை என்றுதான் நாம் கேட்கிறோம்?. 100 நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ.2700 கோடி நிதியை ஒன்றிய அரசு இதுவரை விடுவிக்கவில்லை. வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்திலும் ரூ.3112 கோடி நிதி விடுவிக்கவில்லை. வேலைக்கான வழிமுறையை மாநில அரசே வகுத்துக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும்; தேசிய ஊரக வேலை திட்டத்துக்கு மாநில செயல் திறன் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்,“இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: