சென்னை :ஆத்தூரில் இருந்து திருப்பதிக்கு பேருந்து இயக்குவது இரு மாநிலங்களுக்கு உட்பட்டது என்றும் ஒப்பந்தம் மேற்கொண்ட பிறகு ஆத்தூர் – திருப்பதிக்கு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் அவர்,”சென்னையில் இயக்கப்படும் மின்சார பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே இயக்கப்படுகின்றன.இந்த மின்சார பேருந்துகள் சிறப்பாகவும் லாபகரமாகவும் இயங்கி வருகின்றன. இதன் மூலம் அரசுக்கு எந்த நஷ்டமும் இல்லை.”இவ்வாறு தெரிவித்தார்.
