சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த அரசு பள்ளி மாணவர்கள்

கோவை, ஜன. 23: சென்னை கிண்டி அரசு பள்ளியில் படிக்கும் சுமார் 30 மாணவ, மாணவிகள் விமானம் மூலம் நேற்று கோவை வந்தனர். அந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி நாயுடு அருங்காட்சியத்தை பார்வையிட்டனர். பின்னர், அவர்கள் அங்குள்ள அறிவியல் தொழில்நுட்பங்களை கண்டு ரசித்தனர். தொடர்ந்து அங்குள்ள பழைய வின்டேஜ் ரக கார்களை பார்த்தனர்.

அந்த கார்கள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் சந்தேகங்களை கேட்டு அறிந்தனர். மேலும், மாணவர்களின் தன்னம்பிக்கை, கனவு, கற்றல் மனப்பாங்கு ஆகியவற்றை வளர்க்கும் பயிற்சி அமர்வுகள் நடைபெற்றது. இதில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளை முடித்து விட்டு மீண்டும் கோவையில் இருந்து விமானம் மூலம் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் சென்னை சென்றடைந்தனர். அரசு மாணவ மாணவிகளின் உற்சாக விமான பயணத்தில் அவர்களுடன் ராதாகிருஷ், தேவேந்திரன், ராகவேந்திரன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், கிண்டி ரோட்டரி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: