திருத்துறைப்பூண்டி அருகே பழுதடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, ஜன.23: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே எழிலூர் வடக்குத்தெருவிலிருந்து செல்லியம்மன் கோயில் வழியாக செல்லும் சாலையில் உள்ள வாய்க்காலில் பல ஆண்டுகளுக்கு முன்பு குழாய் போடப்பட்டு சிறிய பாலம் அமைக்கப்பட்டது.

தற்போது பாலம் சேதமடைந்துள்ளது. இதனால் இந்த வழியாக இருச்சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எழிலூர் கடைத்தெரு வழியாக சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக பாலத்தை சீரமைத்து தரவேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Related Stories: