திருக்காட்டுப்பள்ளி, ஜன.23: தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி-கந்தர்வகோட்டை சாலையில் உள்ள தனியார் கம்பெனி அருகே சட்ட விரோதமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், அந்த பகுதியில் செங்கிப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மது பாட்டில் விற்றுக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் அண்டகுளத்தை சேர்ந்த சக்கரவர்த்தி (65) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 100 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
