ஊட்டி, ஜன. 23: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள கூட்டுறவாளர்கள் விருந்தினர் விடுதி கூட்ட அரங்கில் நீலகிரி மாவட்ட கூட்டுறவுத்துறையில் பணியாற்றும் சார்நிலை அலுவலர்களுக்கான மூன்று நாட்கள் புத்தாக்க பயிற்சி வகுப்பு துவங்கியது. இந்த பயிற்சி வகுப்பை நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா துவக்கி வைத்தார்.
முதல் நாளில் நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ராஜா அலுவலக நடைமுறைகள் குறித்தும், கோப்புகளை கையாள்வது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். இப்பயிற்சியில் கூட்டுறவு சங்கங்களின் சட்டம் மற்றும் விதிகள் தொடர்பாகவும், நிதி மற்றும் வங்கியில் தொடர்பாகவும், நுகர்வோர் கூட்டுறவு, பொது விநியோக திட்டம்,
கட்டுப்பாட்டு பொருள்கள் மற்றும் கட்டுப்பாடு பொருட்கள் தொடர்பாகவும் இணைய வழி ஏல முறை மற்றும் முதல்வர் மருந்தகம் தொடர்பாகவும் பல்வேறு விளக்கங்களுடன் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் துணைப்பதிவாளர்கள் அஜித்குமார், கமல் சேட், அய்யனார், முத்துக்குமார், ரவிக்குமார், நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் கௌரிசங்கர், கூட்டுறவு சார்பதிவாளர்கள், கூட்டுறவுத்துறை சார்நிலை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
