வாலிபர் போக்சோவில் சிக்கினார்

மதுரை, ஜன. 23: மதுரையில் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய வாலிபரை, போக்சோ வழக்கில் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். மதுரை கே.புதூர் பகுதியை சேர்ந்தவர் பாரத் (20). இவர் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, யாருக்கும் தெரியாமல் சிறுமியை அழைத்துச் சென்று ரகசியமாக திருமணம் செய்துகொண்டு வாடகைக்கு வீடு பிடித்து குடும்பம் நடத்தி வந்தார்.

இந்நிலையில் சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு டாக்டர் நடத்திய பரிசோதனையில், 5 மாத கர்ப்பிணி என்பது தெரியவந்தது.இதுகுறித்து தகலறிந்த மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய ஊர் நல அலுவலர் பாலஜோதி. சிறுமியிடம் விசாரணை நடத்தி, தகவல்கள் அடிப்படையில் அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு ெசய்து பாரத்தை கைது செய்தனர்.

 

Related Stories: