உசிலம்பட்டி, ஜன. 23: உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் எதிர்வரும் தேர்தலில் அபார வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் தொகுதி பொறுப்பாளர் திருச்சுழி செல்லத்துரை. தலைமயில் நடைபெற்றது. உசிலம்பட்டி திமுக நகர அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்தில் ஒன்றிய நகர, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அவர்களிடம் அந்தந்த பகுதி மக்களின் நிலைப்பாடு, அவர்களிடம் திமுக அரசின் சாதனைகள் குறித்த பிரசாரத்தை கொண்டு சேர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து கருத்து கேட்கப்பட்டது. இதில் உசிலம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித் பாண்டி, மேற்கு ஒன்றிய செயலாளர் எம்பி.பழனி, தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்விஎஸ்.முருகன், சேடபட்டி ஒன்றிய செயலாளர்கள் ஜெயச்சந்திரன், செல்வ பிரகாஷ், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் சுதாகரன், முத்துராமன், ஏழுமலை பேரூர் கழக செயலாளர் ஜெயராமன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
