பூதலூர் அரசு ஆண்கள் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருக்காட்டுப்பள்ளி, ஜன.23: தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி தலைமையில் நடைபெற்ற பேரணி பள்ளியில் தொடங்கி பூதலூர் கடைவீதி வழியாக சென்று நான்கு முனைச்சாலையில் நிறைவு பெற்றது.

இதில், உதவி தலைமை ஆசிரியர் முத்தமிழ்செல்வன், முதுகலை ஆசிரியர்கள் சக்திவேல், ஆசைத்தம்பி, பரமசிவம், உடற்கல்வி ஆசிரியர்கள் செந்தில்வேலன், ராஜவர்மன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பேரணியில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சாலை பாதுகாப்பு குறித்த பதாகைகளை ஏந்தி சென்றனர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பேகன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உரை நிகழ்த்தி பேரணியை நிறைவு செய்தார்.

 

Related Stories: