பொன்னமராவதி,ஜன.23: பொன்னமராவதி அருகே ஒருவருக்கு செயற்கை கால் வழங்கி பொருத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டியைச் சேர்ந்த சிங்காரம் என்பவருக்கு சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் ஒரு கால் எடுக்கப்பட்டது. இதனையடுத்து அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொன்னையூர் டெம்பிள் சிட்டி லயன் சங்க செயலாளர் பழனியப்பனிடம் செயற்கை கால் தேவை என கோரிக்கை மனு அளித்திருந்தனர்.
இதனையடுத்து சங்க சாசன செயலாளர் வேந்தன்பட்டி பழனியப்பன் குடும்பத்தார் சார்பில் ரூ.15ஆயிரம் மதிப்பிலான செயற்கை லயன்ஸ் மாவட்ட ஆளுநர் மணிவண்ணன் வழங்கினார். இதில் டெம்பிள் சிட்டி நிர்வாகிகள், மண்டல தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள், வட்டாரத் தலைவர்கள், அனைத்து லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பங்குபெற்றனர்.
