குன்னம், ஜன.23: குன்னம் ஓலைப்பாடி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் ஓலைப்பாடியை சேர்ந்த நடேசன் மகன் ஆறுமுகம் (55) தனக்கு சொந்தமான ஆடுகளை சடையப்பன் கோவில் அருகில் மேய்த்துக் கொண்டிருந்த இவர் ஆட்டுக்கு இலை தழை பறிக்கும் போது தனியார் சோலார் கம்பெனியிலிருந்து தேனூர் துணை மின் நிலையத்திற்கு செல்லும் ஈபி லைனில் மரக்கிளை உரசி மின்சாரம் தாக்கி துடி துடித்து இறந்தார்.
இதையடுத்த அக்கம்பக்கத்தினர் குன்னம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதைதொடர்ந்து காவல் ஆய்வாளர் கண்ணன் மற்றும் உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆறுமுகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
