நீடாமங்கலம்,ஜன.22: நீடாமங்கலம் பள்ளிக்கு மாநில எழுத்தறிவு விருதை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் 2025-26ஆம் ஆண்டில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் சிறந்த கற்போர் மையமாக செயல்பட்ட நீடாமங்கலம் இலக்குமி விலாச அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிக்கும், சிறப்பாக செயல்பட்ட தலைமை ஆசிரியை தேவிலட்சுமி, ஆசிரியர் பயிற்றுநர் ராதிகா, தன்னார்வலர் பிருந்தா ஆகியோருக்கு மாநில எழுத்தறிவு விருதினை சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.
சிறந்த மையமாக தேர்வு செய்யப்பட்ட நீடாமங்கலம் இலக்குமி விலாச அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரிய பயிற்றுனர் மற்றும் தன்னார்வலரை பள்ளி நிர்வாகத்தினர், வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், நீடாமங்கலம் பேரூராட்சி தலைவர் ராமராஜ், துணைத் தலைவர் ஆனந்த மேரி ராபர்ட் ப்ரைஸ், பல்நோக்கு சேவை இயக்கத்தினர், பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
