தஞ்சாவூர், ஜன.22: தஞ்சையில் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் தூய்மைப் பணி நேற்று நடைபெற்றது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாக குடியிருப்போர் நலச்சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் பிள்ளையார்பட்டி , சிந்தாமணி பகுதிகளில் 8 இடங்களில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தூய்மைப்பணி மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி பல்கலைக்கழக வளாக குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் சுத்தம் செய்யும் பணி நேற்று தொடங்கியது.
இந்தப் பணியை பொறியாளர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இதையடுத்து அனைத்து பூங்காக்களும் சுத்தம் செய்யப்பட்டது. தெருவில் குப்பைகள் அகற்றப்பட்டு தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. வளாகம் முழுவதும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, புதர்கள் வெட்டி அகற்றப்பட்டன. இந்தப் பணியில் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
