பாதுகாப்பு கேட்டு காதல் தம்பதி போலீசில் தஞ்சம்

குடியாத்தம், ஜன. 21: குடியாத்தத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் தம்பதி போலீசில் தஞ்சம் அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் மோனிகா (19), பிஎஸ்சி படித்து முடித்துவிட்டு வீட்டிலிருந்து வருகிறார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் சச்சின் (22), தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.இவர்கள் இருவரும் உறவினர்கள். இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதல் மற்றும் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதனை அறிந்த சச்சின் நேற்று வீட்டில் இருந்து வெளியேறி, மோனிகாவை அழைத்துச் சென்று, சேலம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயிலில் காதல் திருமணம் செய்து கொண்டார்.பின்னர் குடியாத்தத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்குச் சென்று அங்கிருந்து குடியாத்தம் டவுன் போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.போலீசார் விசாரணை நடத்தி இருவரும் மேஜர் என்பதால், இருவரிடமும் கடிதம் பெற்றுக் கொண்டு பாதுகாப்பு கொடுத்து அனுப்பி வைத்தனர்.

 

Related Stories: