சிறுவன் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைப்பு வேலூரில் போதையில் ரகளை

வேலூர், மார்ச் 11: வேலூர் புதிய பஸ் நிலையத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட ஆதரவற்ற சிறுவன், சென்னை செங்குன்றம் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கே.வி.குப்பத்தை சேர்ந்த 17 வயது சிறுவன். பெற்றோர் இருவரும் இறந்து விட்டனர். இதனால் ஆதரவற்று சுற்றித்திரிந்து வந்த சிறுவன் போதைக்கு அடிமையாகி, ஆங்காங்கே ரகளையில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலூர் புதிய பஸ் நிலையத்தில் மதுகுடித்து விட்டு அங்கிருந்த பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வேலூர் வடக்கு போலீசார் சிறுவனை பிடித்து, சென்னை செங்குன்றம் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: