உலக குளோக்கோமா தின விழிப்புணர்வு பேரணி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை சார்பில்

வேலூர், மார்ச் 10: காட்பாடி விருதம்பட்டு ஐ பவுண்டேஷன் மருத்துவமனை சார்பில் நேற்று ‘உலக குளோக்கோமா தின’ விழிப்புணர்வு பேரணி நடந்தது. வேலூர் விருதம்பட்டு பகுதியில் உள்ள தி ஐ பவுன்டேஷன் கண் மருத்துவமனை மற்றும் காட்பாடி ரோட்டரி சங்கம் சார்பில் கண் நீர்அழுத்தம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் சுரேஷ் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். டாக்டர் மாதவி வரவேற்றார். தி ஐ பவுன்டேஷன் துணைத்தலைவர் உலகநாதன், காட்பாடி ரோட்டரி சங்க தலைவர் ரிஸ்வான் ஷெரிப், விருதம்பட்டு எஸ்ஐ ஜெயகோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விருதம்பட்டு கண் மருத்துவமனை முன்பு தொடங்கிய ஊர்வலம் சில்க்மில் வழியாக சென்று மீண்டும் கண் மருத்துவமனை முன்பு முடிவடைந்தது. இதில் நர்சிங் கல்லூரி மாணவிகள் மற்றும் கண் மருத்துவமனை ஊழியர்கள் பலர் கலந்துகொண்டு கையில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். முடிவில் கண் மருத்துவமனை மேலாளர் சீனிவாசன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மார்க்கெட்டிங் ஊழியர்கள் செய்தனர்.

Related Stories: