எஸ்ஐஆர் என்பது மென்பொருள் அடிப்படையிலான முறைகேடு: திரிணாமுல் காங். குற்றச்சாட்டு

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது மென்பொருள் அடிப்படையிலான முறைகேடு என்று திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி டெரிக் ஓ பிரைன், துணைத் தலைவர் சாகரிகா கோஷ் மற்றும் எம்பி சாகேத் கோகலே ஆகியோர் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது , ‘‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பதற்கு உண்மையில் என்ன அர்த்தம்? மென்பொருள் அடிப்படையிலான முறைகேடு. தேர்தல் ஆணையம் நமது நாட்டின் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாகும்.

பல தசாப்தங்களாக ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. ஆனால் இப்போது இந்த மாபெரும் நிறுவனத்தை சிதைக்கும் செயல் தான் என்ன நடந்து கொண்டு இருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கேட்பது வெளிப்படைத்தன்மையை தான். நாங்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு ஆதரவானவர்கள். ஆனால் நாங்கள் ஒரு வெளிப்படையான சிறப்பு தீவிர திருத்தத்துக்கு ஆதரவானவர்கள். தேர்தல் ஆணையம் அரசியல் நலன்களுடன் செயல்படக்கூடாது. வாக்களிக்கும் குடிமகனின் உரிமையை பாதுகாப்பது தேர்தல் ஆணையத்தின் அரசியலமைப்பு கடமையாகும்” என்று தெரிவித்தனர்.

Related Stories: