பெங்களூருவில் அதிகாலை முதல் வரிசையில் காத்திருந்து பட்டு சேலை வாங்கிய பெண்கள்

பெங்களூரு: கர்நாடக பட்டு சேலை கழகத்தின் சார்பில் பாரம்பரியமிக்க பட்டு சேலைகள் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. உண்மையான பட்டு நூல் மற்றும் தங்க ஜரிகைகள் பயன்டுத்தி தயாரிக்கப்படும் பட்டு சேலைகளின் விலை ரூ.25 ஆயிரத்தில் இருந்த ரூ.3 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பெங்களூரு கெம்பேகவுடா ரோட்டிலுள்ள பட்டு சேலை விற்பனை நிலையத்தில் பட்டு சேலைகள் வாங்குவதற்கான கூட்டம் அலை மோதியது. திங்கட்கிழமை ஷோரூம் திறப்பதற்கு முன்பு அதிகாலை 4 மணி முதல் கடைகளில் பெண்கள் குவிந்தனர். இதைத்தொடர்ந்து வரிசையில் அவர்கள் அமர செய்யப்பட்டு யார் முதலில் வந்தார்கள் என்பதை அறிந்து அவர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது.

Related Stories: