பாஜவின் பொருளாதார கொள்கையால் தங்கம், வெள்ளி விலை உயர்வு: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

லக்னோ: உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் தள பதிவில், ஊழல் நிறைந்த பாஜவின் புதிய பொருளாதாரக் கொள்கை ஊழலை திடப்படுத்துதல், ஊழல் வழிகளில் சம்பாதித்த பணத்தை விலை மதிப்பற்ற உலோகங்களாக மாற்றுவதாகும். ஊழலை திடப்படுத்துவது என்பது பாஜ ஆட்சியின் கீழ் ஒரு புதிய பொருளாதாரக் கொள்கையாகும். இதனால் தங்கம், வெள்ளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு கடுமையான சமூக விளைவுகள் இருப்பதாகவும், இது வீடுகள், சுற்றுப்புறங்கள், கடைகள் மற்றும் சந்தைகளில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்கள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். இதற்கு கூடுதல் பாதுகாப்பு படைகள் தேவைப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: