கோவை, ஜன.20: கோவை வடவள்ளி சாலையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள பூச்சியல் துறை சார்பில் ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் வளர்ப்பு மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்த ஒருநாள் பயிற்சி நாளை (ஜன.21) வழங்கப்படுகிறது.
இதில், ஒட்டுண்ணி வகைகள், இரை விழுங்கிகள், நெல் அந்துப்பூச்சி வளர்ப்பு முறை, டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி வளர்ப்பு, புழு ஒட்டுண்ணி வளர்ப்பு, கண்ணாடி இறக்கைப் பூச்சி வளர்த்தல், பொறிவண்டு வளர்ப்பு, பயிர் பாதுகாப்பில் ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் பயன்பாடு குறித்த பயிற்சி அளிக்கப்படும் எனவும், இதற்கு கட்டணமாக ரூ.900 வசூலிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
