வாஷிங்டன்: ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இந்தியா வாங்குவதை கடுமையாக விமர்சித்த அமெரிக்க உயர் அதிகாரிகளில் ஒருவர் பீட்டர் நவரோ. வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகரான அவர் ‘இந்தியாவை வரிகளின் மகாராஜா’ என்றார். ரஷ்ய எண்ணெய்க்காக இந்தியா தரும் பணத்தை ரத்த பணம் என விமர்சித்தார். இந்நிலையில், நவரோ நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘‘இந்தியாவில் ஏஐ பயன்பாட்டிற்காக அமெரிக்கர்கள் ஏன் பணம் செலுத்துகிறார்கள்? சாட் ஜிபிடி அமெரிக்க மண்ணில் இயங்குகிறது. அமெரிக்க மின்சாரத்தை பயன்படுத்துகிறது. ஆனால், இந்தியா, சீனா மற்றும் உலகின் பிற இடங்களில் உள்ள பெரிய பயனர்களுக்கு சேவை செய்கிறது. இதுவும் கவனிக்கப்பட வேண்டிய பிரச்னை’’ என புதிய விவகாரத்தை கிளப்பி உள்ளார்.
