விமானங்கள் ரத்து இண்டிகோவுக்கு ரூ.22 கோடி அபராதம்

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த மாதம் 3 முதல் 5ஆம் தேதி வரை இண்டிகோ விமான நிறுவன இயக்கத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஏராளமான பயணிகள் பாதிக்கப்பட்டன. இந்த பிரச்னை குறித்து விசாரிக்க விமான ஒழுங்குமுறை ஆணையம் நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்தது. அந்த குழுவினர் நடத்தின விசாரணையில் இண்டிகோ நிறுவனத்தின் 2,507 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதையும் 1,852 தாமதங்களையும் கண்டு பிடித்தது. இதனால் பல்வேறு விமான நிலையங்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் சிக்கித்தவித்து பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.22.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இண்டிகோ நிறுவனத்திற்கு ₹50 கோடி வங்கி உத்தரவாதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: